பட்டதாரி கொலை வழக்கில் சகோதரர் உட்பட இருவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement
 பட்டதாரி கொலை வழக்கில் சகோதரர் உட்பட இருவர் கைது

புதுச்சேரி;வீராம்பட்டினத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சகோதரர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வீராம்பட்டினம் வ.உ.சி., வீதியை சேர்ந்தவர் குமார், 70; மீனவர். இவரது மனைவி அன்னக்கொடி,61. மகன்கள் ரஞ்சித்குமார், 40; செந்தில்குமார்,36. பி.டெக், படித்த ரஞ்சித்குமார், குருசுக்குப்பத்தை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற அனிதாவை திருமணம் செய்துகொண்டு, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார்.கடந்த மாதம் புதுச்சேரி வந்த ரஞ்சித்குமார், 10ம் தேதி, அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். அரியாங்குப்பம் போலீசார், விசாரணை நடத்தினர். மகனை கொலை செய்ததாக, குமார் போலீசில் சரணடைந்தார். இவரது மனைவி அன்னக்கொடி கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், பிரான்ஸில் போதிய வருமானம் இல்லாததால் புதுச்சேரி திரும்பிய ரஞ்சித்குமார், தினமும் குடிபோதையில் தகராறு செய்து, சொத்து முழுவதையும் தனது பெயரில் எழுதி தருமாறு நச்சரித்ததால், கொலை செய்யப்பட்டதும், குமார் மனைவி அன்னக்கொடி, இளையமகன் செந்தில்குமார், உறவினர் செல்வம் ஆகியோர் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்ததுசெந்தில்குமார், செல்வம் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் மருந்து, கார், ரத்த கறை படிந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X