பொது செய்தி

இந்தியா

ரூ. 18.53 கோடியில் நீர்தேக்க தொட்டி முதல்வர் நாராயணசாமி திறந்துவைத்தார்

Added : பிப் 13, 2020
Advertisement
 ரூ. 18.53 கோடியில் நீர்தேக்க தொட்டி முதல்வர் நாராயணசாமி திறந்துவைத்தார்

புதுச்சேரி:கருவடிக்குப்பத்தில் ரூ. 18.53 கோடி செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
கருவடிக்குப்பம் பகுதியில் மேஜர் சரவணன் நகர், வாஞ்சிநாதன் நகர், விஷ்ணு நகர், இந்திரா நகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில், கருவடிக்குப்பத்தில் ஹட்கோ நிதியுதவியுடன். ரூ.18.53 கோடி மதிப்பில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 4 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 23 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை செயலர் சுர்பீர்சிங், தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் சேகரன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், ஊர் பிரமுகர்கள் தினகரன், முத்துராமன், மணிமொழி, ரவி, நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X