பொது செய்தி

இந்தியா

உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி;தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
புதுச்சேரி மாநில வங்கியாளர் குழும ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:பாரத பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வருமானத்தை கூட்டும் வகையில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த திட்டம் துவங்கி ஓராண்டு பூர்த்தியாக உள்ள நிலையில், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த விவசாயிகள், பிரதமரின் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு திட்டத்திலும் இணைக்கப்படுவர். இதற்காக மிகவும் எளிமையான ஒரு பக்க விண்ணப்பத்தை பரிந்துரைத்துள்ளது.எனவே, பாரத பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிகளை அணுகி, அவரவர் தேவைக்கேற்ப மற்றும் தகுதி அடிப்படையில் உழவர் அட்டை பெற்று பயனடையலாம்.அதேபோல் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X