பொது செய்தி

இந்தியா

ஆரோவில்லில் நாடக திருவிழா

Added : பிப் 13, 2020
Advertisement
 ஆரோவில்லில் நாடக திருவிழா

புதுச்சேரி:தேசிய நாடகப்பள்ளி சார்பில், 7 நாட்கள் நடைபெறும், நாடகத் திருவிழா ஆரோவில்லில் நேற்று துவங்கியது.
மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், டில்லி தேசிய நாடகப்பள்ளி சார்பில், 21வது பாரத் ரங் மகோத்சவம் இணை நாடகத் திருவிழா, புதுச்சேரி அருகே ஆரோவில்லில் அமைந்துள்ள ஆதிசக்தி அரங்கில் நேற்று மாலை துவங்கியது. இந்த நாடக விழா, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. நாடக விழாவை, புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனிகுமார் துவக்கி வைத்தார். தேசிய நாடகப்பள்ளி தலைவர் அர்ஜூன்தேவ் சரண், நடிகர் நாசர் முன்னிலை வகித்தனர். தேசிய நாடகப்பள்ளி டீன் அபிலாஷ்பிள்ளை, தேசிய நாடகப் பள்ளி இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் வர்மா, புதுச்சேரி பல்கலைக்கழக நாடகவியல் துறை முன்னாள் பேராசிரியர் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.சுவீரன் எழுதி, இயக்கிய பாஸ்கரப் பட்டேளரும் தொம்மியுடே ஜீவிதமும் என்ற மலையாள நாடகம் நடந்தது. இந்த நாடக விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்கள் பங்கேற்கும், 5 இந்திய நாடகங்களும், 2 வெளிநாட்டு நாடகம் நிகழ்த்தப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X