தற்கொலைக்கு முயன்ற மனைவி நெஞ்சுவலியால் கணவர் சாவு

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்க்க வந்த கணவர், அதிர்ச்சியில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகர், முதல் குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (எ) ஜெகதீசன், 37; டிரைவர். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு 10 வயதில் மகன், 4 வயதில் மகள் உள்ளனர்.கலையரசி, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டதால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, கலையரசி, கருவடிக்குப்பம் அருகே முந்திரிதோப்பில் அரளிவிதை அரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அதை பார்த்தவர்கள் கலையரசியை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மதியம் 12:00 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து, மனைவியை பார்த்த ஏழுமலைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதை யாரிடமும் சொல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த ஏழுமலை, திடீரென சுருண்டு விழுந்தார். அவரை. அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழுமலை, பகல் 1:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X