பெயர் பலகைகளில் போஸ்டர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் பலகைகளில் போஸ்டர்

Added : பிப் 13, 2020
Share
 பெயர் பலகைகளில் போஸ்டர்

திண்டிவனம்:திண்டிவனத்தில் ஊர் பெயர் பலகைகளில் ஒட்டப்படும் போஸ்டர் கலாசாரத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பேனர் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அனைத்து கட்சியினர் மட்டுமின்றி, வீட்டு விசேஷங்கள் நடத்துபவர்களும், தற்போது, போஸ்டர் கலாசாரத்திற்கு மாறி விட்டனர்.திண்டிவனம் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் பகுதிகள் மட்டுமில்லாமல், கண்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவருகிறது.குறிப்பாக கிராமப்புறங்களில் ஊர் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. ஒலக்கூர், வெள்ளிமேடுப்பேட்டை, மயிலம், மரக்காணம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் இடைப்பட்ட ஊர்களில் உள்ள பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.நினைவஞ்சலி, காதணி விழா, திருமண விழா போஸ்டர்கள் மட்டுமின்றி, கட்சித் தலைவர்கள் வரவேற்பு விழா போஸ்டர்களும் ஒட்டப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதிதாக ஊருக்கு வருபவர்களுக்கு, இடம் கண்டு பிடிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது.எனவே அரசு ஊர் பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X