பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் எச்சரிக்கை

Added : பிப் 13, 2020
Share
Advertisement

கமுதி:கமுதி, அபிராமம் பகுதிகளில் ரோட்டை சேதப்படுத்தி, குழாய்கள், வாய்க்கால்கள் அமைத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அரிமுகுந்தன் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: கமுதி, அபிராமம் பகுதிகளில் வீடுகள், கடைகளுக்கு தண்ணீர் குழாய், கழிவு நீர் செல்ல வாய்க்கால்கள், கட்டுமான பணிகளுக்காக ரோட்டை சேதப்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அபிராமம் பகுதியில் இதேபோல், ரோட்டை சேதப்படுத்திய தனிநபர் மீது, அபிராமம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வலையபூக்குளம் பகுதியில் விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் ரோட்டோரத்தில் உள்ள கிணறு மூடப்பட்டு, ரோடு அகலபடுத்தப்படும். ரோட்டோரங்களில் பயன்பாடற்ற கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு, அதனை மூடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X