பொது செய்தி

தமிழ்நாடு

கீழக்கரை நகராட்சிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Added : பிப் 13, 2020
Advertisement

கீழக்கரை:கீழக்கரை நகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்காததால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கீழக்கரையை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹுசைன்.இவர், 2016ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கீழக்கரை நகராட்சியில் குடிநீர் இணைப்புகள், தெரு விளக்குகள், சாலை கட்டமைப்புகள், பராமரிப்பு, பொதுக்கழிப்பிடங்கள், பிறப்பு இறப்பு பதிவுகள், டெண்டர் விபரங்கள், அலுவலக கணக்குகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் கோரி மனு செய்திருந்தார்.

30 நாட்களுக்குள் பதில் தரப்படாததால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இதற்கும் அதிகாரிகள் தரப்பில் முழுமையான தகவல்கள் தரவில்லை. இரண்டாவது மேல் முறையீட்டு மனுவில் அதிகாரிகள் தகவல் தராததால் ரூ.5 ஆயிரம் இழப்பீடு, அவர் கோரிய விபரங்களை வழங்கவும் கீழக்கரை நகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X