பொது செய்தி

தமிழ்நாடு

பழைய சந்தை மேட்டுப்பகுதியில் வணிக வளாகம் கட்டப்படுமா?

Added : பிப் 13, 2020
Advertisement
 பழைய சந்தை மேட்டுப்பகுதியில் வணிக வளாகம் கட்டப்படுமா?

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டையில் பழைய சந்தை மேட்டுப்பகுதியில் வணிக வளாகம் அமைத்திட அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவலுார்பேட்டையில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்து விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாரசந்தை புதன் கிழமை தோறும் நடைபெற்று வந்தது.ஊராட்சி நிர்வாகம் ஆண்டு தோறும் நடக்கும் வார சந்தை ஏலத்தில் பங்கீட்டு தொகை வேண்டும் என அறநிலையத்துறையிடம் கேட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது.பின்னர் ஊராட்சியின் சார்பில் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து பெரிய குளம் பகுதியில் வியாபாரிகளிடம் சுங்க வரி வசூலிக்காத நிலையில் புதிதாக வார சந்தை பெரிய அளவில் நடந்தது. 2016ம் ஆண்டிலிருந்து ஊராட்சி நிர்வாகம் மூலம் வார சந்தை ஏலம் ஆண்டு தோறும் விடப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வார சந்தை நடக்காத பழைய சந்தை மேட்டு பகுதி வெறிச்சோடி காணப்படுவதால், அங்கு, லாரிகள், வேன்கள் உள்ளிட்டவைகளை நிறுத்தி வருகின்றனர். மேலும் புதர்கள் மண்டியுள்ளன. 3 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் உள்ள இடத்தில் வணிக வளாகம் அமைத்தால் வியாபாரிகள் பலன் அடைவார்கள்.மேலும் வணிக வளாகம், தங்கும் விடுதிகள், கட்டணக் கழிவறை உள்ளிட்டவைகளை அமைந்தால், இதன் மூலம் மாதம்தோறும் அறநிலைய துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.அவலுார்பேட்டை வளர்ச்சியின் நலன் கருதி பழைய சந்தை மேட்டு பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வணிக வளாகம் உள்ளிட்டவைகளை அமைக்க இந்து சமய அறநிலைய துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X