பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு மாதமாக மூடப்படாத பள்ளம்

Added : பிப் 13, 2020
Advertisement
 ஒரு மாதமாக மூடப்படாத பள்ளம்

விழுப்புரம்:விழுப்புரம் கே.கே., ரோட்டில் ஒரு மாதமாக மூடப்படாமல் உள்ள கழிவுநீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
விழுப்புரம் கே.கே., ரோடு கந்தசாமி லே அவுட் முதலாவது தெரு அருகே, கடந்த ஒரு மாதத்திற்கு முன் நகராட்சி குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் நகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி, குடிநீர் பைப்பை சீரமைத்தனர்.அப்போது, பாதாள சாக்கடை கழிவுநீர் பைப்பை நகராட்சி ஊழியர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதை சரி செய்யாமல், கடந்த ஒரு மாதமாக பள்ளத்தை மூடாமல் நகராட்சி ஊழியர்கள் அலட்சியமாக உள்ளதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை நீடித்து வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, கழிவுநீர் பைப்பை சீரமைத்து பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X