பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா இருசக்கர வாகனம் விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : பிப் 13, 2020
Advertisement

விழுப்புரம்;அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் 2019--20ம் ஆண்டிற்கு, விழுப்புரம் மாவட்டத்திற்கு ஊரக பகுதிகளில் 2,550 மற்றும் நகர்புற பகுதிகளில் 447 என மொத்தம் 2,997 வாகனங்கள் ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பி.டி.ஓ., அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ., அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல், விரைவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.எனவே இத்திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான புதிய விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X