பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி:கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக வாகன நிறுத்தும் பணி

Added : பிப் 13, 2020
Share
Advertisement
 'தினமலர்' செய்தி எதிரொலி:கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக வாகன நிறுத்தும் பணி

விழுப்புரம்:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக வாகன நிறுத்தம் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு வாகனங்களில் வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் தாறுமாறாக நிறுத்தும் நிலை நீடித்து வருகிறது.இதனால், கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக வாகன நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள காலி இடத்தில் கூடுதலாக வாகன நிறுத்தம் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்காக, அப்பகுதியில் செம்மண் கொட்டி, பொக்லைன் மூலம் சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X