சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

செஞ்சி:முன்விரோதத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் ராஜவேந்தன். வழக்கறிஞர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன், 30; கோபால் மகன் குணசேகர், 45; ஆகியோருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த 8ம் தேதி மதியம் ராஜவேந்தன், விழுப்புரம் சாலையில் உள்ள டீ கடைக்குச் சென்றபோது அங்கு அவரை, மணிகண்டனும், குணசேகரும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் மணிகண்டன், குணசேகர் மீது வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X