பொது செய்தி

தமிழ்நாடு

  பண்டிட் தீனதயாள்  நினைவு தினம்  

Added : பிப் 13, 2020
Advertisement

ராமநாதபுரம்:பண்டிட் தீனதயாள் நினைவு தினத்தில் பா.ஜ., சார்பில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் அரண்மனை சிவன் கோயில் பகுதியில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு நாள் நிகழ்ச்சிநடந்தது. பா.ஜ.,நகர் தலைவர் வீரபாகு தலைமையில், ஆர்.எஸ்.எஸ்.,ன் தென் மாநில செயலாளர் ஆடல் அரசன் பண்டிட் தீனதயாள் உபாத்தியாய உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்காக பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததையும்,ஜன சங்கத்தின் தலைவராக இருந்ததையும், பா.ஜ., கட்சியினை உருவாக்கியதையும் நினைவு கூர்ந்தனர். இந் நிகழ்ச்சியில் அன்பு இல்லம் நிறுவனர் மோகன், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், நடராஜன்முன்னாள் நகர் தலைவர் சுப.நாகராஜன், நகர நிர்வாகிகள் கணேசன், பூபதிராஜா, ஜனார்த்தனன், ஜெகன்பிரசாத், நவநீதன், ராஜேந்திரன், வீரபத்திரன், சத்யா, மாரிமுத்து, சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X