அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., துண்டு பிரசுரம் வழங்கல்

Added : பிப் 13, 2020
Advertisement
 பா.ஜ., துண்டு பிரசுரம் வழங்கல்

மரக்காணம்;வானுார் ஒன்றிய பா.ஜ., சார்பில் கோட்டக்குப்பத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த, விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
.நிகழ்ச்சிக்கு வானுார் வடக்கு ஒன்றிய தலைவர் தங்க சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வினாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் மீனவ பெண்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வீதி வீதியாக சென்று வழங்கினார்.மேலும், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலர் கோதண்டபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ், பாபு, லெனின், அய்யனார், மனோகர், சேகர், மகேந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X