பொது செய்தி

தமிழ்நாடு

ரத்ததான முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement
 ரத்ததான முகாம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களின் ரத்ததான முகாம் நடந்தது.விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை மற்றும் வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி தாளாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வீரமணி வரவேற்றார்.கல்லுாரி செயலர் குபேரன் முகாமை துவக்கி வைத்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி குழுவினர் நாட்டுநலப்பணி திட்ட மாணவ, மாணவிகளிடமிருந்து 80 யூனிட் ரத்ததானம் பெற்றனர்.சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ரமணி, பாபு மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கயிலை நாதன் மற்றும் கல்லுாரி துறை பேராசிரியர்கள் ,மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X