மாநில அறிவியல் தினப்போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அறிவியல் தினப்போட்டிகள்

Added : பிப் 13, 2020
Share

ராமநாதபுரம்:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவில் அறிவியல் தின போட்டியை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி' இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் இணையற்ற கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி 'விவசாயி வாழ பயிர்வளம் காப்போம்' என்ற தலைப்பிலும் நடத்தப்படுகிறது.


ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், ஆசிரியர் பயிற்சி, செவிலியர் உள்ளிட்ட கல்லுாரி மாணவர்களுக்கு 'இந்திய பெண் விஞ்ஞானிகளின் இணையற்ற கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், 'பயிர்களை காப்போம், பட்டினி ஒழிப்போம்' என்ற தலைப்பில் கவிதை போட்டியும் நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு அறிவியல் கணொளி போட்டியில் 'எளிய அறிவியல் பரிசோதனைகள்' அல்லது 'ஆச்சர்யமூட்டும் அறிவியல் தகவல்கள்' என்ற தலைப்பிலும், அறிவியல் மீம்ஸ் போட்டியில் 'இன்று தொடரும் மூட நம்பிக்கைகள்' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

படைப்புகளை ஜெரோம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அறிவியல் தினப்போட்டிகள், 1/98 வ.உ.சி., நகர், கலெக்டர் அலுவலகம் அஞ்சல், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு பிப்.,25க்குள் அனுப்பலாம். போட்டி குறித்த விவரங்களை 99654-72253, 94873-76458 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அறிந்துகொள்ளலாம், என மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X