பொது செய்தி

தமிழ்நாடு

கச்சத்தீவு செல்ல பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

Added : பிப் 13, 2020
Advertisement

ராமநாதபுரம்:கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் சர்ச்சில் நடக்கும் திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் சர்ச்சில் மார்ச்., 6,7ல் திருவிழா நடக்கவுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. கடந்தாண்டு தனியார் விசைப்படகில் கச்சத்தீவு செல்ல கட்டணம் அதிகளவு வசூலிக்கப் பட்டதாக மீனவர்களிடமிருந்து புகார் எழுந்தது.

அதனை தொடர்ந்து பங்கு தந்தை தேவசகாயம் கூறுகையில், நடப்பாண்டிற்கு ஒருவர் படகில் செல்ல ரூ.1500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1100 படகு உரிமையாளர்களுக்கும் அடிப்படை வசதிகளுக்காக ரூ.400 வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம், என்றார்.


கலெக்டர் வீரராகவ ராவ் பேசுகையில், ''கச்சத்தீவு செல்லும் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள், அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தடையின்மை சான்று பெறவேண்டும். கச்சத்தீவு செல்லும் படகுகள் உரிய ஆய்விற்கு பின்னரே அனுமதிக்கவேண்டும். பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இக்கூட்டத்தில் சப்-கலெக்டர் சுகப்புத்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X