உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு கடலில்பாலம் அமைக்கும் பணி நிறுத்த வலியுறுத்தல்; உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக புகார்

Added : பிப் 13, 2020
Advertisement

ராமநாதபுரம்:உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு கடலில் பாலம் அமைக்கும் பணியினை நிறுத்தக்கோரி கடலோர கிராம மக்கள் வலியுறுத்தல். உயர் நீதிமன்றஉத்தரவினை மீறுவதாக புகார் தெரிவித்தனர். துணை கலெக்டர் அலுவலகத்தில்சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

உப்பூர் அனல் மின் நிலைய பணிகள் நடந்து வருகிறது. இதில் மோர்ப்பண்ணை பகுதியில் கடலில் 8 கி.மீ., துாரத்திற்கு பாலம் அமைக்கும் பணிகளை லார்சன் டியூப்ரோ நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அப்பகுதி கடலோர கிராம மக்கள், மீனவர்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 13 மாவட்டங்களில் சவுடுமணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவினை மீறி மணலை கடலில் கொட்டி வருகின்றனர். இதனை கண்டித்து அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுக்காததால் பிப்.,10 ல் சாலை மறியல் போராட்டம் நடத்த கடற்கரைகிராம மக்கள் அறிவித்தனர். ராமநாதபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று முன் தினம் நடந்தது. இதில் மீனவ அமைப்புகள், கடற்கரையோரகிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர். சப் கலெக்டர் சுகபுத்ராவிடம் பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர்.சப் கலெக்டர் சம்பவ இடத்தில் நேரில் பார்த்து ஆய்வு செய்து இரு நாட்களில் கலெக்டரிடம்தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X