சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையில் மாமூல் கேட்ட ரவுடி கைது

Added : பிப் 13, 2020
Advertisement
 கடையில் மாமூல் கேட்ட ரவுடி கைது

மரக்காணம்:வானுார் அடுத்த திருச்சிற்றம்பலத்தில் காய்கறி வியாபாரியிடம் மாமூல் ேகட்ட ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் அடுத்த நாவற்குளத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் உயதயராஜ், 26; இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.கடந்த 11ம் தேதி வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் காய்கறி வியாபாரி சுரேஷ், 40; என்பவரிடம் உதயராஜ் மாமூல் கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மறுத்ததால், கத்தியைக் காட்டி மிரட்டினார்.இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து உதயராஜை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை மாட்டுக்காரன்சாவடி அருகே உள்ள குடிநீர் மேல்தேக்க தொட்டியில் உதயராஜ் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடன் தனிப்படை போலீசார் உதயராஜை பிடிக்கச் சென்றனர். போலீசை பார்த்ததும் உதயராஜ் தண்ணீர் தொட்டி மேல் இருந்து குதித்து தப்ப முயன்றார். அப்போது அவர் காலில் முறிவு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கினார்.இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து, பைக் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X