பொது செய்தி

தமிழ்நாடு

குறுங்காடுகள் பணி துவக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement
 குறுங்காடுகள் பணி துவக்கம்

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறுங்காடுகள் அமைக்கும் பணிக்காக மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி தலைமையிலும் துணை தலைவர் சித்ராதேவி ஆணையாளர்கள் ரவி ராஜேந்திரன் முன்னிலையிலும் துவங்கப்பட்டது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறுங்காடுகள் அமைக்கும் பணிக்காக தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, நிழல் தரும் மரங்களான பூவரசு, ஆலமரம், புங்கை உட்பட மரக்கன்றுகள் நடும் பணி துவங்கபட்டது. மரக்கன்றுகளை ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி நடவு செய்து, குறுங்காடுகள் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆணையாளர் ரவி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் வாசுதேவன், சசிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X