பொது செய்தி

தமிழ்நாடு

துருகம் சாலை விரிவாக்கத்திற்கு அளவீடு செய்யும் பணி துவங்கியது

Added : பிப் 13, 2020
Advertisement
 துருகம் சாலை விரிவாக்கத்திற்கு அளவீடு செய்யும் பணி துவங்கியது

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியிலிருந்து தியாகதுருகம் செல்லும் சாலை விரிவாக்கம் செய்வற்காக அளவீடு செய்யும் பணி நடந்தது.
கள்ளக்குறிச்சி நகராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ப நகரினுள் இணையும் சாலைகள் நகர பகுதியிலிருந்து சில கி.மீ., தொலைவு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியை இணைக்கும் நான்கு சாலைகளில் மாநில அரசு நெடுஞ்சாலைகளான கச்சிராயபாளையம் சாலை, சங்கராபுரம் சாலை இரண்டும் ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.ஆனால், தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் சாலை, துருகம் சாலை ஆகிய இரண்டும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.இதற்கான முறையான அனுமதி பெற்றபின் இவ்விரு சாலைகள் விரிவாக்கம் செய்வதற்கான அளவீடு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அதன்படி சேலம் சாலையில் அளவீடு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது, நான்கு முனை சந்திப்பில் இருந்து ஏ.கே.டி., பள்ளி வரையிலான தியாகதுருகம் சாலை அளவீடு செய்யும் பணி நடந்தது.சர்வேயர்கள் மணிகண்டன், விஜயசாந்தி, வி.ஏ.ஓ., தேன்மொழி, கிராம உதவியாளர்கள் கனவான், ராஜப்பா உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X