சர்வதேச போட்டியில் பதக்கம்: முதுகுளத்தூர் மாணவர்கள் சாதனை

Added : பிப் 13, 2020
Share
Advertisement
 சர்வதேச போட்டியில் பதக்கம்: முதுகுளத்தூர் மாணவர்கள் சாதனை

முதுகுளத்துார்:சர்வதேச கபடி போட்டியில் தங்கப்பதக்கமும்,200 மீ ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் பெற்று முதுளத்துார் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சியில் ஜன., நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி தங்கப்பதக்கம் பெற்றது.இதில் தமிழக கபடி அணி கேப்டனாக முதுகுளத்துார் தாலுகா ஏனாதி கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் தாமரை செல்வன்,ஆப்பனுார் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் பாண்டியன் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

200 மீ. ஓட்டத்தில்முதுகுளத்துார் தாலுகா ஏனாதி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் அருண்பூபதிதங்கப்பதக்கம்பெற்றார்.இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். நேபாளத்தில் பொகரா நகர் மைதானத்தில் இளைஞர் கிராமப்புற விளையாட்டு
ற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக நடந்த சீனியர் பிரிவுகபடி போட்டியில்
இந்திய அணி தங்கப்பதக்கம் பெற்றது.

இந்திய கபடி அணியில் தாமரை செல்வன்,கார்த்திக் பாண்டியன் தங்கப்பதக்கம் வென்றனர். ஜீனியர் பிரிவு 200 மீ. ஓட்டத்தில் அருண்பூபதி வெள்ளி பதக்கம் பெற்றார்.கபடியில் தாமரை செல்வன் இந்திய அணி கேப்டனாகவும்,சிறந்த வீரருக்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும்,ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்களுக்கு பொதுமக்கள், இளைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X