பொது செய்தி

தமிழ்நாடு

சர்வோதய மேளா : ராமேஸ்வரம் அக்னி கடலில் அஞ்சலி

Added : பிப் 13, 2020
Advertisement

ராமேஸ்வரம்:72வது சர்வோதய மேளா தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மதுரை சர்வோதயசங்கத்தினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

12.2.1948 ல் மகாத்மா காந்தியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது.
இத்தினத்தை சர்வோதய மேளா தினமாக காந்தீய அன்பர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி நேற்று 72வது சர்வோதய மேளா தினத்தையொட்டி மதுரை மாவட்டம் சர்வேதாயா சங்கம்
சார்பில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மகாத்மா காந்தி படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

பின் மகாத்மா காந்தி படத்துடன் கோயில் ரதவீதியில் ஊர்வலம் வந்து, காஞ்சி மடத்தில்
பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். இதில் புதுமை விவசாயி பாலகார்த்திகேயன், சிதம்பரபாரதி, ஆண்டியப்பன், மதுரை மாவட்ட சர்வோதய சங்க செயலர் கண்ணன், சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X