பொது செய்தி

தமிழ்நாடு

சிறுசேமிப்பு திட்ட முகவர்களுக்கு பரிசு

Added : பிப் 13, 2020
Advertisement

ராமநாதபுரம்:கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் சிறு சேமிப்புத்துறையில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட மகளிர் முகவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

அரசு சிறுசேமிப்பினை ஊக்குவித்திடும் வகையில் சிறுசேமிப்புத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாவட்ட, நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள பொதுமக்களிடத்தில், சிறுசேமிப்பு முகவர்கள் மூலம் அஞ்சலக சிறு
சேமிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில் சிறுசேமிப்புத் திட்ட செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட 21 மகளிர் முகவர்கள் மற்றும் நிலை முகவர்களை பாராட்டி பரிசுகள் கேடயங்கள் வழங்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரப்பன்
உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X