சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு முகாமில்அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Added : பிப் 13, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள களத்துார் ஊராட்சியில் நடந்தமக்கள் தொடர்பு முகாமில், கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாக்கோட்டை ஒன்றியம் களத்துார் ஊராட்சிக்குட்பட்டஅம்மனாபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ.,லதா, தேவகோட்டை ஆர்.டி.ஓ.,சங்கரநாராயணன், தாசில்தார்பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், இலவசவீட்டுமனை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி உதவித்தொகை,விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உட்பட 194பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் கடைசி வரை இல்லை. அதிகாரிகள் மின்வாரியத்தை தொடர்பு கொண்டும் மின்சாரம் வரவில்லை.களத்துார் ஊராட்சியில் நடந்த விழாவில், களத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்காமல், கழனிவாசல், காரைக்குடி பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதால், களத்துார் ஊராட்சி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்த தாசில்தார் பாலாஜி, தனிவட்டாட்சியர் தங்கமணி, வி.ஏ.ஓ., அருள்ராஜ் உடனடியாக 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, மற்ற பயனாளிகளுக்கும் ஒருவாரத்தில் நலத்திட்ட உதவி வழங்குவதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X