தாசில்தாருக்கு ரூ.15,600 சம்பளம்குறைதீர் குழு நீதிபதியிடம் மனு மாநில பொது செயலாளர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தாருக்கு ரூ.15,600 சம்பளம்குறைதீர் குழு நீதிபதியிடம் மனு மாநில பொது செயலாளர் தகவல்

Added : பிப் 13, 2020
Share

சிவகங்கை:''தாசில்தார்களுக்கு பழைய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 15 ஆயிரத்து 600 அடிப்படை சம்பள நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, ஊதிய குறைதீர் குழு நீதிபதி முருகேசனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாக,'' தமிழ்நாடு வருவாய்துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் வி.தர்மராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,சம்பள குறைதீர்க்கும் குழு நீதிபதி முருகேசனை சந்தித்து, ஜன.,2020 ல் தாசில்தார்களுக்கு 15 ஆயிரத்து 600 என அடிப்படை சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும்.(தற்போது 9ஆயிரத்து 300 ) நேரடி நியமன உதவியாளர்களுக்கு 9 ஆயிரத்து 300 சம்பளம், தர ஊதியம் 4 ஆயிரத்து 200 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, அதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளோம்.

நேர்காணல் தேர்வு மூலம் சார்நிலை பணி தொகுதி பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நேரடி நியமன உதவியாளர்களுக்கு மத்திய அரசு, இதர மாநிலங்கள் போன்று 9 ஆயிரத்து 300 க்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம், என்றார். மாநில தலைவர் சையது அபுதாகிர் , ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிலைய செயலர் இசக்கி, முருகன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X