சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வரி கேட்ட நகராட்சிஉதவியாளர் மீது தாக்குதல்: பெண் மீது வழக்கு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் குடிநீர் வரி வசூலிக்க சென்ற நகராட்சி உதவியாளரை அடித்து மிரட்டியதாக, பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

சிவகங்கை கென்னடி தெரு முத்துமணி மனைவி கலாராணி. இவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பிற்கு 2013 ல் இருந்து குடிநீர் வரி நகராட்சிக்கு செலுத்தவில்லை. நேற்று காலை 11:30 மணிக்கு நகராட்சி உதவியாளர்கள் ரசீகா 22, ரசிதா இருவரும், வரி செலுத்துமாறு கேட்டு சென்றனர். அவர்களிடம் வரி கட்டமுடியாது எனக் கூறியதோடு, உதவியாளர் ரசீகாவை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். காயமுற்ற ரசீகா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். உதவியாளர் ரசீகா அளித்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ., வாசிவம் ஆகியோர் கலாராணி மீது வழக்கு பதிந்தனர். கலாராணியின் வீட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X