பொது செய்தி

தமிழ்நாடு

சங்க பொதுக்குழு கூட்டம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement

மானாமதுரை:மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது,

துணைத்தலைவர்கள் பாண்டியன்,ராசு வரவேற்றனர்.பொருளாளர் மீனாட்சிசுந்தரம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.நிர்வாகிகள் லுாயிஸ்ராஜ்,மைக்கேல்,சந்திரசேகரன் பேசினர்.கூட்டத்தில் மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை துவக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கும்,பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பது, மானாமதுரையில் நள்ளிரவு நேரங்களில் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச்செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X