முதல்வர் தனிப்பிரிவில் தமிழுக்கு பாரபட்சமா

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்புவனம்:தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்ய தமிழுக்கு குறைந்த அளவு எழுத்துக்களும், ஆங்கிலத்தில் அதிக எழுத்துக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னை குறித்து பலரும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பி வருகின்றனர். தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதங்கள் தற்போது இணையதளம் மூலமாக அனுப்பப்படுகிறது. இணையதளத்தில் குடிநீர் பிரச்னை, அதிகாரிகளின் முறைகேடு, சட்டவிரோத செயல் குறித்து பலரும் புகார் அனுப்பி வருகின்றனர்.

இதில் பிரச்னை குறித்து தமிழில் 700 எழுத்துக்களுக்குள் எழுத வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் 2 ஆயிரம் எழுத்துக்கள் வரை எழுதலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மணல்மேடு ராஜா கூறுகையில், பிரச்னையின் தீவிரம் குறித்து அனைத்து தகவல்களையும் பதிவு செய்தால் மட்டுமே தெரியப்படுத்த முடியும் தமிழில் சொற்கள் கூடுதலாக வரும் ஆங்கிலத்தில் சுருக்கமாக சொல்ல முடியும். ஆனால் இணையதளத்தில் தனிப்பிரிவில் புகார் அளிக்க எழுத்துக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு 700 எழுத்துக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கிலத்தில் 2 ஆயிரம் எழுத்துக்கள் வரை எழுதலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X