பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

Added : பிப் 13, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம் தலைவர் சித்திரவேல் தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,மானாமதுரை பகுதியில் உள்ளூர் கட்டுமான தேவைக்கு அரசின் அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை வழங்கி மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மாவட்ட கலெக்டர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

ஏற்கெனவே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மணல் குவாரி அமைக்க தடையில்லா சான்று பெற்று 10 மாத காலமாகியும் மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்காததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக மணல் அள்ள அனுமதி வழங்க கோரி தொழிலாளர்கள் குடும்பத்தோடு பிப். 20ந் தேதி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும், மேலும் இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள், மணலை பயன்படுத்துவோர் என அனைத்து தரப்பினரையும் அழைப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நமச்சிவாயம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X