பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

Added : பிப் 13, 2020
Share

மயிலம்:மயிலம் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் |நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மயிலம் வட்டார வள மையம் சார்பில் ஆலகிராமம் குறு வள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி குழந்தைகளை எவ்வாறு ஆரோக்கியமாக வளர்க்கலாம். தொற்று நோய், தொற்றா நோய் ஆகியவற்றை எவ்வாறு தடுக்கலாம். கொரோனா வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.திண்டிவனம் பகுதி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மைனர் திருமணத்தை தடுப்பது. அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து பேசினார்.ஆசிரியர் தாமோதரன் பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம், பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துதல், பள்ளிக்கு தேவையானவற்றை கொண்டு வருதல், கற்றல் கற்பித்தல் போன்றவை குறித்து பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு விளக்கமளித்து பயிற்சி அளித்தனர்.சுகாதார மேற்பார்வையாளர் வாசு, சுகாதார ஆய்வாளர் துரைசாமி உட்பட ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X