பொது செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில் கடத்தியவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement
 மது பாட்டில் கடத்தியவர் கைது

திருக்கோவிலுார்;வடபொன்பரப்பி அருகே மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருக்கோவிலுார் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் குமரன் உள்ளிட்ட போலீசார் வடபொன்பரப்பி அடுத்த வடகீரனுார் பஸ் நிறுத்தத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பிரம்மகுண்டம் நோக்கி வேகமாகச் சென்ற ஸ்கூட்டியை விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த குபேந்திரன், 43; என்பதும், பெங்களூருவில் இருந்து விஸ்கி பாட்டில்களை எடுத்து வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.அவரிடமிருந்து 672 பாட்டில் விஸ்கி, கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிந்து குபேந்திரனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விஸ்கியின் மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X