சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் மூழ்கியவர் உடல் கரை ஒதுங்கியது

Added : பிப் 13, 2020
Advertisement

மரக்காணம்:கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடி கடலில் மூழ்கியவர் உடல் புதுச்சேரி அருகே கரை ஒதுங்கியது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நிக்கல்ரெட்டி, 22; இவர் தனது கல்லுாரி நண்பர்கள் 9 பேருடன் கடந்த 10ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அன்று மாலை 6:00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடி கடலில் நிக்கல்ரெட்டி குளித்தார்.அப்போது திடீரென நிக்கல்ரெட்டி அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்தனர்.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு புதுச்சேரி சாராய ஆலை அருகே நிக்கல்ரெட்டி உடல் கரை ஒதுங்கியது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X