அனுமதியின்றி சுவர் விளம்பரம் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி சுவர் விளம்பரம் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு

Added : பிப் 13, 2020
Share

விழுப்புரம்:அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் சுவர் மற்றும் விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வினோதினி, 25; கொடுத்த புகாரின்பேரில், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், 24; அயினம்பாளையம் ஞானவேல்ராஜா, 21; பெரியார் நகர் பவுனியன், 20; ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X