பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.50 கோடியில் நகராட்சி வளர்ச்சி பணிகள்: பூமி பூஜை விழா: அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 ரூ.50 கோடியில் நகராட்சி வளர்ச்சி பணிகள்: பூமி பூஜை விழா: அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சியில் புதிய வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
விழுப்புரம் நகராட்சி நுாற்றாண்டு விழாவையொட்டி 50 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அந்த நிதியில், 4.65 கோடி ரூபாய் மதிப்பில் விழுப்புரம் நகராட்சி அலுவலக புதிய கட்டடம்.மேலும், எம்.ஜி.ஆர்., நகர், காகுப்பம் 3.33 கோடி ரூபாய் மதிப்பிலும்; எருமனந்தாங்கல் முதல் குச்சிப்பாளையம் வரை 3.33 கோடி ரூபாய் மதிப்பிலும்; ஆசிரியர் நகர், ராகவன்பேட்டை மற்றும் பானாம்பட்டு பகுதிகளில் 2.25 கோடி ரூபாய் மதிப்பிலும்; சுபிக்ஷ்ா கார்டன் மற்றும் பானாம்பட்டு பகுதிகளில் 2.05 கோடி ரூபாய் மதிப்பிலும்; மணி நகர் 3வது தெரு பகுதியில் 2.05 கோடி ரூபாய் மதிப்பிலும்; சேவல் செல்வராஜ் நகர், வழுதரெட்டி (பைபாஸ் ரோடு) பகுதிகளில் 2.57 கோடி ரூபாய் மதிப்பிலும்; என்.ஜி.ஜி.ஓ., காலனி மற்றும் மெயின் சாலை மற்றும் சாலாமேடு ஆகிய பகுதிகளில் 1.65 கோடி ரூபாய் மதிப்பிலும்; வழுதரெட்டி அன்னை இந்திரா தெருவில் 1.64 கோடி ரூபாய் மதிப்பிலும் புதிய தார் சாலை போடப்பட உள்ளது.இப்பணிகளுக்காக அந்தந்த பகுதிகளில் நடந்த பூமி பூஜைக்கு அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார்.
கலெக்டர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.,க்கள் சக்ரபாணி, முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஆவின் சேர்மன் முருகன், மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பசுபதி, அ.தி.மு.க., நகர செயலர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைத் தலைவர் ராமதாஸ், நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணைச் செயலர் குமரன் முன்னிலை வகித்தனர்.நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி, அ.தி.மு.க., நகர இலக்கிய அணி செயலர் திருப்பதி பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X