அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., கொடி நாள் விழா

Added : பிப் 13, 2020
Advertisement
 தே.மு.தி.க., கொடி நாள் விழா

விழுப்புரம்:விழுப்புரம் நகர தே.மு.தி.க., சார்பில் அக்கட்சி கொடி நாள் விழா நடந்தது.
விழுப்புரம் நகராட்சி 22வது வார்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் வெங்கடேசன், கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.மாநில கேப்டன் மன்ற துணை செயலர் ராஜசந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் முருகன், இளைஞரணி துணை செயலர்கள் பிரபு, சீனு, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் ஆதவன்முத்து, நகர தலைவர் சிவா, பொருளாளர் சுபாஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.திண்டிவனம்நகர தே.மு.தி.க., சார்பில், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே கட்சிக் கொடியேற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலர் காதர் பாஷா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், சஞ்சீவி வெங்கடேசன், கவுஸ் மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.அவலுார்பேட்டைசெவலப்புரை தாதங்குப்பம் கிராமத்தில் கிழக்கு ஒன்றிய தே.மு.தி.க., செயலர் முத்துசாமி தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கிளை செயலர் கனகசபை, ஊராட்சி துணைச் செயலர் வெங்கடேசன், மகளிரணி செயலர் செல்வி, நெசவாளர் அணி துணை செயலர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X