பொது செய்தி

தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் மீண்டும் 'கண் பிரிவு': புதுப்பொலிவுடன் அரசு மருத்துவமனையில் துவக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு மீண்டும் பொது பொலிவுடன் இயங்குகிறது.அனைத்து வசதிகளும் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கென தனி பிரிவு துவங்கப்பட்டு அறுவை சிகிச்சை தியேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் டாக்டர்களும் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் டாக்டர் ஓய்வில் சென்றதால் கடந்த 2 ஆண்டுகளாக கண் டாக்டர் நியமிக்க வில்லை. கண் பிரச்னைக்காக வரும் நோயாளிகளை விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செயல்படாமல் இருந்த கண் பிரிவை காய்ச்சல் வார்டாக மாற்றினர்.நோயாளிகள் பாதிப்பை சந்தித்தனர்.
இதனிடையே தற்போது கண் பிரிவிற்கு 3 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு ஆப்பரேஷன் மற்றும் பெட் வசதிகள் செய்யப்பட்டன. தினமும் கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் கண்புரை நீக்கம், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் அறுவை சிகிச்சை , தேவைப் பட்டால் உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர்கள் தயாராக உள்ளனர்.

கிராம மக்கள் இனி கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு இனி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை கண் பிரிவில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயகுமாரிஹேமலதா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X