என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா

Added : பிப் 13, 2020
Share
 என்.எஸ்.எஸ்.,  முகாம்  துவக்க விழா

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரியின் என்.எஸ்,எஸ்., திட்ட சிறப்பு முகாம் கட்டங்குடி, குளத்துப்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லுாரி செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைவர் சொக்கலிங்கம், பொருளாளர் கதிர்வேல், உப தலைவர் செந்திவேல், முதல்வர் சந்திரா, துணை முதல்வர் கந்தவேல்சாமிமுன்னிலை வகித்தனர்.

திட்ட அலுவலர் ஜாய்ஜான்சி வரவேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமாறன் பேசினார்.மரம் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, தொழில் கல்வி, பொது மருத்துவ முகாம், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழை நீர் சேகர விழிப்புணர்வு நடந்தது.

டாக்டர் பரிமளசெல்வன், வழக்கறிஞர்கள் தங்கவடிவேல், செல்லப்பாண்டி, ஆசிரியர் செல்வம், ஐ.சி.டி.சி., கவுன்சிலர் சிவக்குமார், ராஜயோகா ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு சங்கர், ஜாய்ஜான்சி செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X