பொது செய்தி

தமிழ்நாடு

பைக் ஸ்டாண்டாக மாறிய பஸ் நிலையம்: நடவடிக்கை தேவை

Added : பிப் 13, 2020
Advertisement
 பைக் ஸ்டாண்டாக மாறிய பஸ் நிலையம்: நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால், பயணிகள் பஸ் டிரைவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பஸ்களின் வருகைக்கேற்ப பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தரைத்தளம், பஸ்கள் நிற்பதற்கான தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டது.பஸ் நிலையத்தில் சென்னை, திருக்கோவிலுார், சேலம், திருவண்ணாமலை என அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தடுப்பு கட்டைகளில் நிறுத்திச் செல்ல வேண்டும். ஆனால், அவ்வாறு பஸ்கள் நிறுத்தாமல் சற்று துாரம் இடைவெளி விட்டும், பஸ் நிலையத்தின் நடுவிலும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால் பஸ்கள் நிற்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகள் மற்றும் மேற்பரப்பு பகுதிகள் தற்போது இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. கடை உரிமையாளர்கள் மற்றும் பயணிகளை பஸ் ஏற்ற வரும் பொதுமக்கள் என பல தரப்பினர் தங்கள் பைக்குகளை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், பஸ் பயணிகளுக்க மட்டுமின்றி பஸ் டிரைவர்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.எனவே, பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X