ஸ்ரீவி., பள்ளியில் கராத்தே போட்டி

Added : பிப் 13, 2020
Advertisement
  ஸ்ரீவி., பள்ளியில்  கராத்தே போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது.பள்ளி இயக்குனர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். ஸ்ரீவி.,எம்.எல்.ஏ., சந்திரபிரபா துவக்கி வைத்தார்.

திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து 20 பள்ளிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் 50 , மற்ற 6 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.

பல்கலைகழக பேராசிரியர் சுரேந்திரன், சென்சாய் இராஜசேகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்புசாமி, விஜயராம், ரத்னா மணி பங்கேற்றனர்.இதே போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் இருந்து பங்கேற்ற 32 மாணவர்களில் 15 பேர் முதலிடம், 10 பேர் இரண்டாமிடம், 7 பேர் மூன்றாமிடம் பெற்றனர்.இவர்களை பள்ளி தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X