பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் கொலை மிரட்டல் வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து

Added : பிப் 13, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை டாக்டர் புகாரில் போலீசார் போட்ட கொலை மிரட்டல் வழக்கை மதுரை உயர்நீதி மன்ற கிளை ரத்து செய்தது.

இங்குள்ள குமரன் புது தெருவை சேர்ந்த அய்வராஜ், பழனிவேல் ஆகியோரிடம் அரசு டாக்டர் ஜெயந்தி புரோ நோட் பற்றும் வங்கி செக்குகள் கொடுத்து கடனுக்கு பணம் வாங்கி உள்ளார். குறிப்பிட்ட தேதியில் செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது. டாக்டர் மீது அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரித்த நீதிபதி, டாக்டருக்கு தலா 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து டாக்டர் விருதுநகர் செசன்ஸ் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து விடுதலை பெற்றார். இதை எதிர்த்து அய்வராஜ் , பழனிவேல இருவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இதனிடையே அய்யனார், அய்வராஜ் மற்றும் பழனிவேல் ஆகியோர் கிளினிக் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக டவுண் போலீசில் டாக்டர் புகார் கொடுத்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி சாமிநாதன் ,மூவர் மீதும் அருப்புக்கோட்டை போலீசார் பதிந்த வழக்கை ரத்து செய்தார். டாக்டர் மீதான செக் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X