பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் கம்பன் விழா கட்டுரைப் போட்டி

Added : பிப் 13, 2020
Advertisement
 அரசு கல்லுாரியில் கம்பன் விழா கட்டுரைப் போட்டி

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கம்பன் விழா கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தியாகதுருகம் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கம்பன் கழக நெறியாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மோட்சானந்தம் வரவேற்றார்.சங்கராபுரம் திருக்குறள் பேரவை லட்சுமிபதி, சாந்தகுமார், கல்லுாரி மாணவர்கள் அன்பரசன், சிவசக்தி ஆகியோர் கம்பன் படைத்த காவிய சிறப்புகளை விளக்கினர்.தொடர்ந்து கஸ்துாரி இளையாழ்வார், அமுதன், கீதாஞ்சலி ஒரு குழுவாகவும், அறிவழகன், வாசுதேவன், பரமேஸ்வரி ஆகியோர் ஒரு குழுவாகவும் இணைந்து, 'கம்ப ராமாயணம் படித்து மகிழ்வதற்கே; பின்பற்றி வாழ்வதற்கே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.நெடுமானுார் பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவர் கதிர்வேல், சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதைத்தம்பி, கற்க கசடற இலக்கிய மன்ற தேவ திருவருள் ஆகியோர் நடுவர்களாக பட்டிமன்றத்தை நடத்தினர்.தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் சுப்ரமணியன் பரிசு வழங்கி பாராட்டினார்.கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஆனந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கம்பன் கழக மகளிரணி செயலர் பருவத அரசி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X