சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசை கண்டித்து கடையடைப்பு,மறியல்

Added : பிப் 13, 2020
Advertisement
 போலீசை  கண்டித்து  கடையடைப்பு,மறியல்

சாத்துார்:சாத்துார் ஏழாயிரம்பண்ணையில் போலீசை கண்டித்து கடையடைப்பு, மறியல் போராட்டம் நடந்தது.

ஏழாயிரம்பண்ணை சிவசங்குபட்டியை சேர்ந்தவர் சிவானந்தம், 28. திருத்தணியில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 5ல் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.அன்று மாலை 5:00 மணிக்கு ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரத்தில் உள்ள உறவினரை பார்த்து விட்டு டூவீலரில் ஊர் திரும்பினார். ஏழாயிரம்பண்ணை மாரியம்மன் கோயில் அருகில் எஸ்.ஐ., ராமசாமி ,ஏட்டு காளிதாஸ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

சிவானந்தம் டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார். விரட்டி சென்ற எஸ்.ஐ., ராமசாமி, ஏட்டு காளிதாஸ் சிவானந்தத்தை ஸ்டேஷன் அழைத்துசென்று நிர்வாணப்படுத்தி தாக்கினர். காயமடைந்த அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.எஸ்.ஐ., , ஏட்டு காளிதாஸ், போலீஸ்காரர் மோகன் மற்றும் தாக்கியபோலீசார் மீது வழக்கு பதிவு செய்யகோரி ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்று கிராம மக்கள் கடையடைப்பு நடத்தினர்.

இதோடு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை செய்ய சிவசங்குபட்டி விலக்கில் குவிந்தனர். போலீசார் தடுத்து நிறுத்த மறியல் செய்தனர். சாத்துார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்தவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் பரிந்துரைப்பதாக கூற கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X