போட்டியில் சாதித்த கணேசன் கல்லுாரி | Dinamalar

போட்டியில் சாதித்த கணேசன் கல்லுாரி

Added : பிப் 13, 2020
Share

சிவகாசி:விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரி மாணவி நிவேதா முதல் இடம் பிடித்தார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் தங்கப்பாண்டி 2 ம் இடம் பிடித்தார். கட்டுரை போட்டியில் மாணவி கவிதா 3 ம் இடம், நாட்டுப்புற பாடல் போட்டியில் மாணவன் சுபாஷ் 3 ம் இடம் பிடித்தனர். மாவட்ட போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிசு வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி தாளாளர் அசோகன், கல்லுாரி இயக்குனர் நந்தநிலா, முதல்வர் தீபிகாஸ்ரீ பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X