தமிழ்நாடு

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: குடியிருப்புகள் நடுவில் அரசு அலுவலகங்கள்; புதுமுகங்கள் உலாவருவதால் பெண்கள் அச்சம்

Added : பிப் 13, 2020
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு நடுவில் அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள் இருப்பதால் தினம் உலாவரும் அடையாளம் தெரியாதவர்களால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள் குடியிருப்புகளுக்கு நடுவில் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்திலும் பல துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையில் முக்கியமான துறைகள் சில குடியிருப்புகளுக்கு நடுவில் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.

இதனால் இதையொட்டிய குடியிருப்பில் உள்ள பெண்கள், முதியோர் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். அரசு அலுவலகங்களில் பொதுவாக டெண்டர் விடுவது, நலத்திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட செயல்பாடுகள் நடக்கிறது. இது தொடர்பாக பெரும்பாலும் கட்சியினரே வந்து செல்கின்றனர். உடன் வரும் போது ரவுடி போன்ற அச்சுறுத்துவோரை அழைத்து வருகின்றனர்.

டெண்டர் விடும் நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதம், குளறுபடி நடந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை போன்றவை ஏற்படுகின்றன. பல அலுவலகங்களில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியை முடக்கியிருப்பர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாதாரண மக்கள் சிரமப்படுகின்றனர்.

விருதுநகர் வேலுச்சாமிநகரில் மீன்வளத்துறை அலுவலகம், குடிமைபொருள் வழங்கல் போலீஸ் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியினர் தினசரி சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
வாடகை கட்டடத்தில இயங்கி வரும் இந்த அலுவலகங்களால் வருவாய் இழப்பு தான் மிச்சம். கலெக்டர்தான் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இடமாற்றம் செய்யலாமே

குடியிருப்புகளில் அரசு அலுவலகங்கள் இருப்பதால் பொதுமக்களிடம் தேவையில்லாத அச்சங்கள் தான் ஏற்படுகின்றன. மக்களின் நலன் கருதி அனைத்து அலுவலகங்களையும் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னை எந்த வடிவில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.கட்டட உரிமையாளர்களும் வாடகை கிடைக்கிறதே என்பதை தவிர்த்து சுற்றிய மக்களின் நலனையும் காக்க முன் வரவேண்டும்.
ரவீந்திரன், சமுக ஆர்வலர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X