வந்தார்கள்...இடித்தார்கள்...சென்றார்கள் நகராட்சி நிர்வாகத்தால் தவிக்கும் மக்கள்

Added : பிப் 13, 2020
Advertisement
 வந்தார்கள்...இடித்தார்கள்...சென்றார்கள்  நகராட்சி நிர்வாகத்தால் தவிக்கும் மக்கள்

விருதுநகர்:விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்தால் காரணமே இல்லாமல் சாலையை தோண்டி குதறி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகரில் பெரும்பாலான பகுதிகளில் முறையான சாலை , வாறுகால் கட்டமைப்பு இல்லை. பல இடங்களில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மீண்டும் முறையாக மூடப்படாமல் அப்படியே விட்டு செல்வதால் டூவீலர்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மதுரை ரோட்டி்ல புதியதாக போட்ட ரோட்டை மீண்டும், மீண்டும் தோண்டி குதறி வருவதால் அரசுநிதி வீணாவதுடன் விபத்திற்கும் வழிவகுக்கிறது.

இங்குள்ள ஒரு மேன்ஹோலில் கழிவுநீர் வெளியேறியதற்கு ரோட்டின் அனைத்து மேன்ஹோலையும் திறந்து, ரோட்டை உடைத்து மதுரை ரோட்டையே நாசமாக்கி விட்டனர். இதனால் பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் புல்லலகோட்டை ரோட்டில் நகராட்சி நிர்வாகத்தால் காரணமே இன்றி திடீரென நல்லா இருந்தா ரோட்டை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி சாக்கடை கழிவுநீர் வெளியே தெரியும்படி விட்டு சென்றுள்ளனர்.

தோண்டிய குழிகளை முறையாக மூடினார்களா என்றால் இல்லை . மணல் மேடாக ரோட்டில் அப்படியே விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. கழிவுநீர் துர்நாற்றத்ததால் மக்கள் முகம் சுளிக்கின்றனர். இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி செய்கிறோமே பஸ்கள், கனரக வாகனங்கள் எப்படி இந்த ரோட்டில் செல்ல முடியும் என்ற சிந்தனை கூட இல்லாமல் உள்ளனர் துறை அதிகாரிகள். இவர்களை குறை சொல்லி என்னாவது, மாவட்டம் நிர்வாகம் முதல் நகராட்சி நிர்வாகம் வரை உள்ள அனைத்து துறை அரசு அதிகாரிகளும் இப்படித்தானே உள்ளனர் என்கின்றனர் விருதுநகர் மக்கள்.


கடமை பணியால் அரசு நிதி வீண்



மண் அள்ளும் இயந்திரம் மூலம் கடைகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த வாறுகால் கட்டமைப்புகளை அகற்றி விட்டனர். இதனால் சாலையோரங்கள் முழுவதும் குண்டும், குழியுமாக மாறி விட்டது. அதை அப்படியே விட்டு சென்று விட்டனர். அவசரக்கதியில் போக்குவரத்திற்கு மிக முக்கியமான புல்லலகோட்டை ரோட்டை சர்வ சாதாரணமாக இடித்து தள்ளிவிட்டனர். அவசர தேவைக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக நிறைவேற்றி இருந்தாலே, இதுபோன்ற ரோட்டை உடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. கடமையை முறையாக செய்யாமல், கடமைக்கே என செய்தால் இப்படித் தான் அரசு நிதி வீணாகும்.-முருகேசன், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் , விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X