சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் சப்ளையில் அலட்சிய போக்கு ஸ்ரீவி.,நகராட்சி அதிகாரி இடமாற்றம்

Added : பிப் 13, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் குடிநீர் சப்ளையில் பொதுமக்களின் புகார்களின் மீது அலட்சியத்துடன் செயல்பட்ட குடிநீர் வழங்கல் அலுவலர் இடமாற்றம் செய்யபட்டார்.

ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் சப்ளையில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு சீரற்ற சப்ளை நடந்தது. பொதுமக்கள் தரப்பில் கூறப்படும் புகார்களில் அலட்சியத்துடனும், தொடர்ந்து கண்காணித்து சீரான சப்ளை செய்யாமலும் குடிநீர் வழங்கல் அலுவலர் அனந்தராமகிருஷ்ணன் செயல்பட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினர் தொகுதி எம்.எல்.ஏ.,சந்திரபிரபாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அலுவலர் அனந்தராமகிருஷ்ணனை கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X