பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Added : பிப் 13, 2020
Advertisement
 மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி:அகர கோட்டாலம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாக கட்டடம் பழுதாகி உபயோகிக்க முடியாத நிலையில் பயனற்று கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாக கட்டடம் முறையான பராமரிப்பில்லாததால் பழுதாகி பயன்பாடின்றி உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினரின் பராமரிப்பில் இயங்கி வந்த இந்த கட்டடம், கழிவறைகளின் கதவுகள் உடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இக்கழிப்பிடத்தில் போர்வெல், மினி டேங்க், கதவுகள் என அனைத்து வசதிகள் இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாமல் போனது.கடந்த 2011-12ம் ஆண்டு 1.03 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் தண்ணீர் வசதி இல்லாததால் மூடிக் கிடக்கிறது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து பயனுள்ளதாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X