சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் மோதல் இரண்டு பேர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 45; இவருக்கும் இவருடைய சகோதரர்கள் பாலு, முனியன் ஆகியோருக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த 9ம் தேதி கணேசன் விளை நிலத்தில் உள்ள 3 பேருக்கும் பொதுவான கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டது. இதில் கணேசன் ஒரு தரப்பினராகவும், பாலு மற்றும் முனியன் ஒரு தரப்பினராகவும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார், இரு தரப்பையும் சேர்ந்த வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன்கள் பாலு, 42; இவரது மனைவி பாப்பாத்தி, முனியன், இவரது மனைவி பவுனு, கணேசன் இவரது மனைவி கிருஷ்ணவேணி, 48; ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து பாலு, கிருஷ்ணவேணி ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X